2023 செப்டெம்பர் 26, செவ்வாய்க்கிழமை

மூத்த செய்தியாளர் மாணிக்கவாசகம் எழுதிய நூல் வெளியீடு

Editorial   / 2023 மே 22 , மு.ப. 11:27 - 0     - {{hitsCtrl.values.hits}}மூத்த செய்தியாளர் அமரர் பொன்னையா மாணிக்கவாசகம் எழுதிய 'நினைவுகள் நிகழ்வுகள் நெஞ்சில் மோதும் எண்ண அலைகள்' என்ற நூல் வெளியீடு வவுனியா கந்தசாமி கோவில் திருமண மண்டபத்தில் எதிர்வரும்   சனிக்கிழமை  (27)  பிற்பகல் 3 மணிக்கு நடைபெறவுள்ளது.

வவுனியா வடக்கு வலய ஆசிரிய மத்திய நிலையத்தின் முகாமையாளர் சு.ஜெயச்சந்திரன் தலைமையில் நிகழ்வு இடம்பெறும். 

 

வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியின் ஓய்வு நிலை உப பீடாதிபதி  ந.பார்தீபன் வெளியீட்டுரை நிகழ்த்துவார். ஊடக நோக்கு என்ற தலைப்பில் யாழ் பல்கலைக்கழக பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம், அரசியல் நோக்கு என்ற தலைப்பில் யாழ் பல்கலைக்கழக அரசறிவியல் துறைத் தலைவர் பேராசியர் கே.ரி.கணேசலிங்கம், சமூகநோக்கில் யாழ் .பல்கலைக்கழக ஊடகத்துறை வருகை விரிவுரையாளர், பத்திரிகையாளர் அ.நிக்ஸன் ஆகியோர் ஆய்வுரைகளை நிகழ்த்தவுள்ளனர்.

வவுனியா பல்கலைக்கழக உப வேந்தர் பேராசிரியர் த.மங்களேஸ்வரன், கவிஞர் லதா கந்தையா, வீரகேசரி நாளிதழ் உதவிச் செய்தி ஆசிரியர் ஆர்.ராம் ஆகியோர் சிறப்புரையாற்றுவர்.

எழுத்தாளர் மேழிக்குமரன் வரவேற்புரை நிகழ்த்த ஓய்வு நிலைக் கல்விப் பிரதிக் கல்விப் பணிப்பாளரும் அமரர் மாணிக்கவாசகத்தின் மனைவியுமான திருமதி நாகேஸ்வரி மாணிக்கவாசம் ஏற்புரையையும் நன்றி உரையையும் வழங்குவார். நிகழ்வுக்கு அனைவரும் அழைக்கப்படுகின்றனர்.

மூத்த செய்தியாளர் மாணிக்கவாசகம் கடந்த ஏப்ரல் மாதம் பன்னிரெண்டாம் திகதி இயற்கை எய்தினார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .