2021 ஒக்டோபர் 21, வியாழக்கிழமை

பசுவை வெட்டி குளத்தில் வீசிய விசமிகள்

Niroshini   / 2021 செப்டெம்பர் 28 , பி.ப. 01:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வவுனியா - தவசிகுளம் பகுதியில், கன்று ஈனும் நிலையில் இருந்த பசு ஒன்றை வெட்டிய விசமிகள், அதனை அருகில் உள்ள குளத்தில் எறிந்துள்ளனர்.

வவுனியா - தவசிகுளம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரின் நல்லின வளர்ப்பு பசு கடந்த இரு தினங்களுக்கு முன்னர் காணாமல் போயுள்ளது.

இதனையடுத்துகாணாமல் போன பசுவை தேடிய பேது, குறித்த பெண்ணின் வீட்டுக்கு அருகில் அமைந்துள்ள குளத்தில் உயிரிழந்த நிலையில் காணப்பட்டது.

குறித்த பசுவின் தலை மற்றும் உடல் பகுதிகள் கூரிய ஆயுதத்தால் அறுக்கப்பட்டிருந்தன.

சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X