2022 ஓகஸ்ட் 11, வியாழக்கிழமை

மன்னார் மக்களிடம் விடுக்கப்பட்ட அவசர கோரிக்கை

Freelancer   / 2022 ஜூலை 06 , பி.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

லெம்பர்ட்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் எதிர்வரும் 8 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை இரத்த வங்கியில் விசேட இரத்ததான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் செந்தூர் பதிராஜா தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் இரத்த வங்கியில் குருதி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

குருதி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் வகையில்  இரத்ததான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக O+ மற்றும் B+ வகை குருதிக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

எனவே இரத்ததானம் செய்ய விரும்புபவர்கள் இதில் கலந்து கொண்டு இரத்த தானம் செய்து கொள்ள முடியும்.

மேலதிக தகவல்களுக்கு மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் இரத்த வங்கியுடன் தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் செந்தூர் பதிராஜா அவசர கோரிக்கையை முன்வைத்துள்ளார். (R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .