2022 ஜனவரி 21, வெள்ளிக்கிழமை

யானை தாக்கி ஒருவர் பலி

Niroshini   / 2021 நவம்பர் 25 , மு.ப. 11:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மன்னாகண்டல் கிராமத்தில், இன்று  (25),  காட்டுயானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்

மன்னகண்டலை,  கெருடமடு பகுதியை சேர்ந்த 65 வயதுடைய அழகன் கோபால்ராஜ் என்பவரே, இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.
 
நேற்று  (24) இரவு 9 மணியளவில்,  வீட்டில் இருந்து மீன் பிடிப்பதற்காக சென்ற குறித்த நபர், வீட்டுக்கு திரும்பி வராத நிலையில், அவரை உறவினர்கள் தேடியுள்ளனர்.

இந்நிலையில், இன்று  அதிகாலை 2 மணியளவில், காட்டுபகுதியில் அவர் உயிருழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

சம்பவம் தொடர்பில், புதுக்குடியிருப்பு பொலிஸாரால், விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X