Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Sudharshini / 2015 ஒக்டோபர் 17 , மு.ப. 09:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
தேயிலை தொழிலாளர்களே - இனி
தேயிலை நிறைகளாய் ஒன்றுபடுவோம்
இழப்பதற்கு ஏதுமில்லை எமது கரத்தில்
ஈர்த்து பெற பல உள்ளன
நல்ல ஊதியம் முதல் இந்த உலகம் வரை
சந்தா பணத்துக்காக எம்மை சார்ந்து
இருப்பவர்களிடம் சரிந்து விடாதீர்
திண்ண சோறும் குடிக்கேதும் கொடுத்தாலும்
திருப்பிக் கூறங்கள்- நாங்கள் குடிப்பது
எங்கள் உடல் களைப்பக்கு மட்டும் என
உதிர வேர்வையில் உருவான
உம் உழைப்புக்கு ஊதியத்தை
உயர்வாய் தர உரத்த குரலில் உரைத்திடுக
காலம் பல உழைத்தும் கல் கூண்டையே
வீடாய் கண்டீர்
குருவிக்கு சிறு கூடு
குல மனிதனக்கு ஒரு வீடு
என்பதை மனதில் கொண்டு
தலைமைகளுக்கு தர்க்கமாய் கூறுக
பல கால லய வாசத்தை மாற்ற
புயலாய் எழுக – உதிரம் சிந்தினாலும்
ஒருபோதும் இனி உதிர்ந்த பூவாய் வாடதீர்
எஸ்.ஆர்.விஜயரட்ணம்
நோர்வூட்
7 minute ago
19 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
19 minute ago