2021 ஜூலை 27, செவ்வாய்க்கிழமை

இந்திய அரசின் உதவியில் முதல் கட்டமாக 200 வீடுகள் அமைக்க திட்டம்

Menaka Mookandi   / 2010 ஓகஸ்ட் 30 , பி.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.விவேகராசா)

இந்திய அரசின் நிதி உதவியுடன் வவுனியா மாவட்டத்தில் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பத்தாயிரம் வீடுகள் அமைக்கப்படவுள்ளன. இதன் முதல் கட்டமாக 200 வீடுகள் அமைக்கப்படும் என வவுனியா மாவட்ட மேலதிக அரச அதிபர் என்.திருஞானசம்பந்தர் தெரிவித்தார்.

வீடுகளை அமைக்கும் இந்திய கம்பனி ஒப்பந்தக்காரர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை வவுனியா வந்து மாவட்ட அரச அதிபர் உள்ளிட்ட சிரேஷ்ட உயரதிகாரிகளை சந்தித்து விபரங்களைப் பெற்றனர்.

புளியங்குளம், மரையடித்தகுளம், குடாகச்சகொடி, வீடியாபாம் ஆகிய இடங்களில் தலா 50 வீடுகள் முதல் கட்டமாக நிர்மாணிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .