2021 ஜூலை 31, சனிக்கிழமை

சந்தேக நபர்களுக்கு 28ஆம் திகதிவரை விளக்கமறியல்

Menaka Mookandi   / 2010 செப்டெம்பர் 14 , பி.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.ஜெனி)

மன்னார் மூர்வீதி காட்டுப்பள்ளி வாகல் பின்புர கடற்பரைக்கு அருகாமையில் கடந்த மாதம் 27 ஆம் திகதி கொலை செய்யப்பட்டு எறியயூட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட ஆண் ஒருவரின் சடலம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 03 சந்தேக நபர்களையும் தொடர்ந்து எதிர்வரும் 28ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் இன்று உத்தரவிட்டார்.

குறித்த கொலை தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வந்த மன்னார் பொலிஸார் மன்னார் பகுதியைச் சேர்ந்த 03 சந்தேகநபர்களை கைது செய்தனர்.

கடந்த முதலாம் திகதி இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியபோது இவர்களை இன்று செவ்வாய்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இன்று மீண்டும் இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியப்போது எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியிலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .