2021 செப்டெம்பர் 21, செவ்வாய்க்கிழமை

பாடசாலையின் பெயர் மாற்றம்

Super User   / 2010 நவம்பர் 01 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சரண்யா)

altகிளிநொச்சி, சாந்தபுரம் பகுதியில் அமைந்துள்ள பாடசாலையான சாந்தபுரம் கலைமகள் வித்தியாலயத்தின் பெயர் கடந்த 12ஆம் திகதி முதல் மாற்றப்பட்டுள்ளது.

இந்தப் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து, நலன்புரி நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்ட மக்கள் இந்த வித்தியாலயத்திலேயே தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
 
அதன் பின்னர் கடந்த மாதமே சாந்தபுரம் மக்கள் தம் சொந்த இடங்களுக்கு மீள்குடியேற அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் எவ்வித முன்னறிவித்தலுமின்றி இப்பகுதியில் இருந்த ஒரேயொரு பாடசாலையான சாந்தபுரம் கலைமகள் வித்தியாலத்தின் பெயர், கிளிநொச்சி கலைமகள் வித்தியாலயம் என மாற்றப்பட்டுள்ளது.

புதிய பெயர் பொறித்த பெயர்ப்பலகை அண்மையில் திரைநீக்கம் செய்யப்பட்டது. இதில் இராணுவ அதிகாரிகள் உட்பட பெருமளவானோர் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .