2023 செப்டெம்பர் 24, ஞாயிற்றுக்கிழமை

கட்டுவபிட்டிய தேவாலயத்தில் விசேட ஆராதனை

Editorial   / 2023 ஏப்ரல் 21 , பி.ப. 02:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.இஸட். ஷாஜஹான்

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுக்கு இன்று 21 ஆம் திகதி  4 வருடங்கள் நிறைவடைவதையிட்டு கொழும்பு கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயம் முதல்  நீர்கொழும்பு கட்டுவபிட்டிய தேவாலயம் வரை  காலை 8 மணி முதல் 8 .45 மணி வரை  மக்கள் கைகோர்த்து அமைதியான முறையில் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதன் போது கத்தோலிக்க மத தலைவர்கள், கத்தோலிக்க மக்கள்  இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதை காணக்கூடியதாக இருந்தது.

இதேவேளை, நீர்கொழும்பு கட்டுவபிட்டிய தேவாலயத்தில் இன்று (210காலை விசேட  ஆராதனை இடம்பெற்றது.

 ஈஸ்டர் குண்டு வெடிப்புத் தாக்குதல் இடம் பெற்ற போது கட்டுவபிட்டிய  தேவாலயத்தில் வைத்து காயம் அடைந்தவர்களும், சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களுடைய உறவினர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X