2022 மே 29, ஞாயிற்றுக்கிழமை

செட்டியார் தெருவில் பரபரப்பு: வாள்வெட்டில் ஒருவர் காயம்

Editorial   / 2021 டிசெம்பர் 15 , பி.ப. 12:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு – செட்டியார் தெருவில் உள்ள தங்க ஆபரண கடையொன்றில் இன்றுக்காலை வாள்வெட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தை அடுத்து அப்பகுதியில் பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது.  பையொன்றில் மறைத்து எடுத்து வந்த வாளை எடுத்தவர், கடைக்கு வெளியில் நின்றும், உள்ளே சென்றும் சரமாரியாக வெட்டியுள்ளார்.

 இதில், ஒருவர் பலத்த காயமடைந்தார். அங்கிருந்தவர்களால் மீட்கப்பட்ட நபர், சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தியவர், வாளை எடுத்துக்கொண்டு நடுவீதியில் நின்றவாறும் கூச்சலிட்டுள்ளார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் நாலாபுறங்களும் பதறியடித்து சிதறியோடினர்.

  கொடுக்கல் வாங்கள் பிரச்சினையே இந்த வாள்வெட்டுக்கான காரணமென ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதென பொலிஸார் தெரிவித்தனர்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .