2022 மே 29, ஞாயிற்றுக்கிழமை

காணாமல்போன மஹரகம சிறுமி வீடு திரும்பினார்

Freelancer   / 2022 ஜனவரி 12 , பி.ப. 09:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஹரகம பகுதியில் இருந்து கடந்த 7 ஆம் திகதி காணாமல் போன 15 வயது சிறுமி வீடு திரும்பியுள்ளதாக சிறுமியின் தாயார், பொலிஸாருக்கு  இன்று (12) அறிவித்துள்ளார்.

மஹரகம, நாவின்ன பிரதேசத்தைச் சேர்ந்த நேஹா கௌமதி ஹேரத் என்ற சிறுமி காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், மஹரகம பொலிஸ் விசேட குழுவொன்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

சிறுமியின் படத்தை நேற்று ஊடகங்களுக்கு வெளியிட்ட பொலிஸார், அவரைக் கண்டுபிடிக்க பொது மக்களின் உதவியை நாடினர்.

சிறுமியின் தாயார் மஹரகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, சம்பவம் தொடர்பில் ஊடகங்களில் செய்தி வெளியாகியதையடுத்து தனது மகள் தனக்கு அழைப்பு விடுத்ததாகவும்  வீடு திரும்பியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .