2021 டிசெம்பர் 07, செவ்வாய்க்கிழமை

ஹிஷாலினி விவகாரம்: ரிஷாட்டிடம் வாக்குமூலம்

Editorial   / 2021 ஓகஸ்ட் 10 , மு.ப. 09:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிப்பெண்ணாக பணியாற்றிய, தலவாக்கலை- டகயமவைச் சேர்ந்த 16 வயதான ஹிஷாலியின் மரணம் தொடர்பில், ரிஷாட் எம்.பியிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

விசேட பொலிஸ் குழுவே, அவரிடம் விசாரணைகளை மேற்கொண்டு வாக்குமூலத்தை பதிவு செய்துகொண்டுள்ளது என பொலிஸ் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு தெற்குப் பிரிவு சிறுவர் மற்றும் பெண்கள் பணியக அதிகாரிகளுடன் சென்றிருந்த விசேட பொலிஸ் குழு, ரிஷாட் பதியுதீன் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் குற்றப்புலனாய்வு விசாரணைப் பிரிவுக்குச் சென்று, வாக்குமூலத்தை பெற்றுக்கொண்டுள்ளது என்றும் அந்த உயரதிகாரி தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சரான பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனின் கொழும்பு இல்லத்தில் பணிப்பெண்ணாக வேலைசெய்தபோது, ஜூலை 3ஆம் திகதியன்று எரிகாயங்களுக்கு உள்ளான நிலையில் கொழும்பு ​தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அந்த சிறுமி, ஜூலை 15ஆம் திகதியன்று மரணமடைந்தார்.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில்,  ரிஷாட் பதியுதீனின் எம்.பியின் மனைவி, மனைவியின் தந்தை, மனைவியின் சகோதரர் சிறுமியை வேலைக்கு சேர்த்த இடைத்தரகர் ஆகியோர்,  விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். அவர்களின் விளக்கமறியல், ஓகஸ்ட் மாதம் 23ஆம் திகதி வரையிலும், நேற்று (09) நீடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .