2021 டிசெம்பர் 03, வெள்ளிக்கிழமை

ஜனாதிபதி அதிரடி: 2 நிறுவனங்களை தன்வசப்படுத்தினார்

Editorial   / 2021 ஓகஸ்ட் 01 , பி.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தனக்கு கீழ் மேலும் இரண்டு நிறுவனங்களை  கொண்டுவந்தார்.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவின் கீழிருந்த இரண்டு திணைக்களங்களையே ஜனாதிபதி தனது அதிகாரத்தின் கீழ் கொண்டுவந்துள்ளார்.

சிவில் பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் பல்நோக்கு அபிவிருந்தி செயலணி திணைக்களம் ஆகிய இரண்டுமே இவ்வாறு ஜனாதிபதியின் ​பொறுப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது என அறிவித்துள்ள ஜனாதிபதி செயலகம், இதுதொடர்பில் விசேட வர்த்தமானி அறிவித்தலும் வெளியிட்டுள்ளது.

.பொலிஸ் துறையில் ஆகக்கூடுதலான அர்ப்பணிப்பை செய்வதற்கு அமைச்சர் சரத் வீரசேகரவுக்கு இடமளிக்கும் வகையிலே​யே இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X