2023 ஒக்டோபர் 03, செவ்வாய்க்கிழமை

பீப்பிங் டாம் கைது

Editorial   / 2023 மே 16 , பி.ப. 06:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

குளியலறையின் கதவின் ஒரு துளை வழியாக இளம் பெண்கள் குளிக்கும் காட்சிகளை தனது கையடக்கத் தொலைபேசியில் வீடியோ எடுத்த பீப்பிங் டாம் (Peeping Tom) ஒருவர், மினுவாங்கொடை பதில் நீதவான் அதுல குணசேகர முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு மே 29 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

சந்தேக நபர், கட்டுநாயக்கவில் பெண் ஆடைத் தொழிலாளர்களுடன் பகிர்ந்துகொள்ளப்பட்ட விடுதியில் தங்கியிருந்த பண்டாரகம பகுதியைச் சேர்ந்த ஆண் ஆடைத் தொழிலாளி ஆவார்.

தங்கும் விடுதியில் உள்ள தனி குளியலறையில் பெண் ஆடைத் தொழிலாளர்கள் குளிக்கும் காட்சிகளை அவர் வீடியோ படம் பிடித்தது விசாரணையில் தெரியவந்தது.

பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரிடமிருந்து கிடைத்த முறைப்பாட்டின் போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரின் கையடக்கத் தொலைபேசியில் பல இளம் பெண்களின் குளியலறைக் காட்சிகள் உள்ளதாக நீதிமன்றில் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபரை நீர்கொழும்பு பொது வைத்தியசாலையின் மனநல மருத்துவர் முன்னிலையில் ஆஜர்படுத்தி மே 29 ஆம் திகதி மருத்துவ அறிக்கையை சமர்ப்பிக்குமாறு நீர்கொழும்பு சிறைச்சாலை அத்தியட்சகருக்கு பதில் நீதவான் உத்தரவிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .