2023 செப்டெம்பர் 28, வியாழக்கிழமை

கைகள் இரண்டும் கடலில்: கற்களுக்குள் கத்தி

Editorial   / 2023 மார்ச் 26 , பி.ப. 01:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொரட்டுவை கொரலவெல்ல பிரதேசத்தில் மின்னியலாளர் ஒருவரின் கைகள் வெட்டப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த 36 வயதுடைய கொரலவெல்ல பிரதேசத்தை சேர்ந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், கை​களை துண்டாடுவதற்காக பயன்படுத்தப்பட்ட கத்தி, கைப்பற்றப்பட்டுள்ளது.

​எகொடஉயன மோசஸ் வீதியிலுள்ள கடற்கரையில் கற்களுக்கு இடையில் இருந்து இன்று (26) காலை மீட்கப்பட்டுள்ளது என கல்கிஸை பிரிவின் குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்தனர்.

துண்டாடப்பட்ட இரண்டு கைகளையும் அந்த இடத்திலேயே கடலில் வீசிவிட்டதாக சந்தேகநபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

 சந்தேகநபர் தனது சட்டத்தரணியுடன் கல்கிசை நீதவான் நீதிமன்றில் வெள்ளிக்கிழமை (24)  ஆஜர்படுத்தப்பட்ட பின்னர்,    48 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணை நடத்த பொலிஸாருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அதனடிப்படையில் இன்றையதினம் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

இரு அண்டை வீட்டாருக்கு இடையே ஏற்பட்ட தனிப்பட்ட முன்விரோதம் காரணமாக நபரொருவரின் கைகளை முழங்கையுடன் வெட்டி எடுத்துச்சென்ற சந்தேகநபரை கைது செய்ய மொரட்டுவ பொலிஸார் நடவடிக்கை எடுத்திருந்தனர். 

செவ்வாய்க்கிழமை (21) இரவு மொரட்டுவ, கொரலவெல்ல பிரதேசத்திலுள்ள தனது வீட்டுக்கு முன்னால் நின்று கொண்டிருந்த போது, சந்தேக நபர் கூரிய ஆயுதத்தால்  40 வயதுடைய நபரின் கைகளைத் துண்டித்துள்ளார்.

இம்பெற்ற சம்பவத்தில் கொரலவெல்ல பிரதேசத்தில் வசிக்கும் மின்னியலாளர் ஒருவரே கைகளை இழந்திருந்தார்.

பாதிக்கப்பட்ட நபரை மீட்டு பாணந்துறை ஆதார வைத்தியசாலையில்  பிரதேசவாசிகள் அனுமதித்துள்ள போதும் கைகளை எடுத்துச் செல்லாமல் இருந்தால் அவற்றை ஒட்டவைத்திருக்க முடியும் என்று வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .