2023 ஜூன் 01, வியாழக்கிழமை

மேல் மாகாண பரீட்சைகள் ஒத்திவைப்பு

Editorial   / 2023 மார்ச் 14 , பி.ப. 03:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேல் மாகாண கல்வித் திணைக்களத்தால் நடத்தப்படும் இறுதிப் பரீட்சையில் நாளை (15) நடைபெறவிருந்த பரீட்சைகள் யாவும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அந்தப் பரீட்சைகள் இந்த மாதம் 21 மற்றும் 22ஆம் திகதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

அதனடிப்படையில் தரம் 9 க்கான கணிதம், சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய பாடங்களுக்கான பரீட்சைகள் 21ஆம் திகதியும், தரம் 10 மற்றும் 11ஆம் தரத்துக்கான பாட பரீட்சைகள் 22ஆம் திகதியும் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளன.

தொழிற்சங்கங்கள் நாளை (15) முன்னெடுக்கவிருக்கும் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களும் பங்கேற்க தீர்மானித்துள்ளமையை அடுத்தே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்று மேல் மாகாண கல்விப்பணிப்பாளர் ஸ்ரீலால் நோனிஸ் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .