2021 நவம்பர் 29, திங்கட்கிழமை

தமிழோசை வானொலியின் 4ஆம் ஆண்டு விழா

A.P.Mathan   / 2011 மார்ச் 25 , மு.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தமிழோசை இணைய வானொலியின் 4ஆம் ஆண்டு விழாவும் பரிசளிப்பு விழாவும் கடந்த செவ்வாய்க்கிழமை தெஹிவளை எஸ்.டி.எஸ். ஜயசிங்க மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அமைச்சர் றிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். சிறப்பதிதிகளாக பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, நாடாளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீ.மு.காங்கிரஸின் செயலாளர் நாயகமுமான ஹஸன் அலி, புரவலர் ஹாஸிம் உமர் மற்றும் ஊடகத்துறையைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர்.

தமிழோசை வானொலியின் வாழ்நாள் சாதனையாளர் விருது, ஊடகத்துறையில் 42 வருடங்களுக்கு மேலாக பணியாற்றிவரும் அருணா செல்லத்துரைக்கு வழங்கப்பட்டது. சிறப்பு விருது பிரபல ஊடகவியலாளர் ஜோர்க்கிம் பெர்ணான்டோவுக்கும் வாழ்நாள் இலக்கிய சாதனையாளர் விருது புரவலர் ஹாஸிம் உமருக்கும் வழங்கப்பட்டது.

தமிழோசை வானொலியின் சிறந்த சந்தைப்படுத்தல் விருது றைஹானா அஸீஸுக்கு வழங்கப்பட்டது. ஆய்வு செயற்றிட்ட விருது நூஃமுஹம்மத் கியாஸுக்கு வழங்கப்பட்டது. உலக நேயர்களின் வாக்கெடுப்பில் தமிழோசை வானொலியில் 'கவிதையும் கானமும்' நிகழ்ச்சியினை தொகுத்து வழங்குகின்ற ராஹுல் பிரதீபன் முதலிடத்தைப் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

2010ஆம் ஆண்டின் தமிழோசை வானொலியின் நட்சத்திர அறிவிப்பாளராக றைஹானா அஸீஸ் தெரிவு செய்யப்பட்டார்.

சர்வதேச தமிழ் வானொலிகளில் முதன்மை நிலையை அடைந்தமைக்காக தமிழோசை வானொலியின் பணிப்பாளர் யசீமுக்கு சிறப்பு விருதும் வழங்கி வைக்கப்பட்டது. அத்தோடு நிகழ்ச்சி தொகுப்பாளர்களின் சில இறுவட்டுகளும் வெளியிட்டு வைக்கப்பட்டதோடு கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன. Pix: Kithsri De Mel


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .