2022 மே 29, ஞாயிற்றுக்கிழமை

ஆண் மனது

Editorial   / 2019 ஓகஸ்ட் 16 , பி.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொதுவாக பெண் மனது ஆழம், பெண் மனதில் என்ன உண்டென்று தெரிந்து  கொள்வது சிரமம் என்று சொல்வதைக் கேட்டிருக்கிறோம். ஆனால் நாம் ஆண் மனங்களைப் பற்றி எப்போதும் அறிய முயன்றதில்லை.
குழந்தை நான்குமாதக் கருவாய் தாய் வயிற்றில் இருக்கும்போதே அதன் அறிதல் தொடங்கி விடுவதாக அறிவியல் சொல்கிறது. அதற்கும் முன்பே கூட இருக்கலாம். அறிவியலில் இன்னும் நிரூபிக்கப்படவில்லை என்பதால் நமக்குத் தெரியவில்லை; நமக்குத் தெரியவில்லை என்பதால் எதுவும் செய்யலாம் என்பதில்லை.

மனநல மருத்துவர்களைக் கேட்டுப் பாருங்கள்; ஆணோ அல்லது பெண்ணோ பிற்காலத் திருமண வாழ்வில் மகிழ்வாக ஈடுபட முடியாமல் போவதற்கு, முதல் முக்கியமான காரணம் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம். மாமியார் மருமகள் பிரச்சினை போல, இந்தத் துன்பம் தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

“பொதுவாகப் பெரும்பாலான ஆண்கள் எல்லோருமே சிறுவர்களைப் பயன்படுத்தி இருப்பார்கள்; ‘கே’ என்றெல்லாம் அர்த்தமல்ல; ஆனால், பயன்படுத்துவார்கள்” என்று ஒரு நண்பர் சொன்னபோது ஆச்சரியமாக இருந்தது.

‘சிறுவர் பருவத்தைக் கடந்து வந்த ஒவ்வோர் ஆணுக்கும் தனக்கு நடந்த பாலியல் வக்கிரத்தைப் பற்றிச் சொல்ல எத்தனையோ கதைகள் இருக்கும்; ஆண் ‘மீ டூ’ எழுதினால் ஆணுலகமே தாங்காது’ என்பது இன்னொரு நண்பனின் கருத்து. பொதுவாக எல்லோரும் சொல்லுவார்கள். “ஆம்பளைகள் என்றாலே அப்படித்தான். எது செய்வதற்கும், அவர்கள் காரணமில்லை; அவர்களுடைய ஹோர்மோன்தான் காரணம்” என்று.

ஆம், மனோவியல் நிபுணர்களைக் கேளுங்கள், மருத்துவர்களைக் கேளுங்கள். இதுதான் உண்மை, இதுதான் உண்மை என்பார்கள். இதுவரை கண்டுபிடிக்கப்பட்டு, ஊர்ஜிதப்படுத்தப்பட்டதை மட்டுமே நம்புவதுதான் ஆண் மனது. தனக்குச் சாதகமானதைச் சொல்லித் திரிவார்கள். அவர்கள் புதியனவற்றை ஏற்றுக் கொள்வது சிரமம். இதனைப் புரிந்து கொள்ள ஒரு சிம்பிளான விதி இருக்கிறது!

நாம் சைக்கிள் கற்கும்போது சைக்கிள் ஓட்டுபவர்களாகவே தென்படுவார்கள்; ஏதோ ஒரு பிரான்ட் மோட்டார் சைக்கிள் வாங்க நினைக்கையில், அந்த ‘பிரான்ட் மோட்டார் சைக்கிளாகவே கண்ணில் படும். இதுதான் - மனம் நம்புவதை, கண் காண்கிறது. மனம் விரும்புவதையே புலன்கள் உணர்கின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .