2021 ஓகஸ்ட் 02, திங்கட்கிழமை

‘காடுகளிலிருந்து வந்தவர்கள் ‘பிரேஸிலியர்கள்’

Shanmugan Murugavel   / 2021 ஜூன் 10 , மு.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

“இந்தியர்களிலிருந்து வந்தவர்கள் மெக்ஸிக்கர்கள், காட்டிலிருந்து வந்தவர்கள் பிரேஸிலியர்கள், ஆனால் நாங்கள் ஆர்ஜென்டீனியர்கள் கப்பல்களிலிருந்து வந்தோம். அக்கப்பல்கள் ஐரோப்பாவிலிருந்து வந்தன” என்று ஆர்ஜென்டீனாவின் ஜனாதிபதி அல்பேர்ட்டோ பெர்ணாண்டஸ் தெரிவித்துள்ளார்.

ஆர்ஜென்டீனாவுக்கு விஜயம் செய்த ஸ்பெய்ன் பிரதமர் பெட்ரோ சந்தேஸுக்கே குறித்த கருத்தை ஜனாதிபதி பெர்ணான்டஸ் வெளிப்படுத்தியிருந்தார்.

இந்நிலையில், ஆர்ஜென்டீனாவின் பெரும்பாலான ஐரோப்பிய குடியேற்றவாசிகளையே இவ்வாறு ஜனாதிபதி பெர்ணாண்டஸ் விளித்திருந்தார்.

அந்தவகையில், தனது கருத்துகளுக்கு ஜனாதிபதி பெர்ணாண்டஸ் பின்னர் மன்னிப்புக் கோரியிருந்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .