2023 செப்டெம்பர் 24, ஞாயிற்றுக்கிழமை

லம்போர்கினியில் சிறுநீரகம்

Ilango Bharathy   / 2022 டிசெம்பர் 22 , பி.ப. 02:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

நூற்றுக்கணக்கான கிலோமீற்றர் தொலைவில் உள்ள நோயாளிகளுக்கு சிறுநீரகங்களை வழங்குவதற்காக பிரத்யேகமாக மாற்றியமைக்கப்பட்ட லம்போர்கினி சூப்பர் காரை இத்தாலிய பொலிஸார் பயன்படுத்தியுள்ளமை மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இத்தாலியின் வடகிழக்கில் உள்ள படுவாவிலிருந்து மொடெனா மற்றும் ரோம் ஆகிய இடங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கே குறித்த சிறுநீரகங்கள் கொண்டுசெல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது குறித்து பொலிஸார் வெளியிட்டுள்ள பதிவில், " இரண்டு பேருக்கு சிறுநீரகம் பரிசாக வழங்கப்பட்டது. அவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மகிழ்ச்சியான மற்றும் அமைதியான கிறிஸ்துமசை கொண்டாட முடியும் என்று நம்புகிறோம்" என்று பதிவிட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X