2022 மே 20, வெள்ளிக்கிழமை

சிறுவனுக்காகப் பாடசாலைக்குச் செல்லும் ரோபோ

Ilango Bharathy   / 2022 ஜனவரி 17 , மு.ப. 10:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜோசுவா என்ற 7 வயது சிறுவனுக்காக  ரோபோவொன்று  பாடசாலை சென்று வரும் வினோத சம்பவம் ஜேர்மனியில் இடம்பெற்றுவருகின்றது.

கடுமையான நுரையீரல் பாதிப்பு காரணமாக, கழுத்தில் குழாய் இணைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் ஜோசுவா, பாடசாலைக்குச் சென்று தனது கல்வியைத் தொடர முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதால், அவனது கல்விக்காக, உள்ளூர் அமைப்பு ஒன்று குறித்த ரோபோவிற்கான  செலவை ஏற்றுக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவதார் என அழைக்கப்படும் அவ் ரோபோவானது அச்சிறுவனுக்குப் பதிலாக பாடசாலைக்குச்  சென்று, அவன் வீட்டிலிருந்து பாடம் படிக்க உதவி செய்து வருகிறது.

அத்துடன் அச் சிறுவன் அமரும் இடத்தில் அமர்ந்து கொண்டு பாடங்களை கவனிக்கும் ரோபோ, ஆசிரியர் கேட்கும் கேள்விகளுக்கு ஜோசுவா பதிலளிக்க உதவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .