Shanmugan Murugavel / 2021 ஜூன் 10 , பி.ப. 04:46 - 0 - {{hitsCtrl.values.hits}}

வட அத்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு (நேட்டோ) நட்புறவு நாடுகள் ஆதரவளித்தால், ஹமிட் கர்ஸாய் சர்வதேச விமான நிலையத்தின் கட்டுப்பாட்டை ஏற்க துருக்கிப் படைகள் இணங்கியுள்ளதாக, அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் ஹுலுசி அகர் தெரிவித்துள்ளார்.
நேட்டோ நட்புறவு நாடுகளுடனான சந்திப்பொன்றிலேயே குறித்த கருத்தை அகர் வெளிப்படுத்தியுள்ளார்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலுள்ள இவ்விமான நிலையத்தைக் கட்டுப்படுத்தும் பொறுப்பை அங்குள்ள 500 துருக்கிப் படைகள் ஏற்குமென அகர் தெரிவித்துள்ளார்.
நிதி, உபகரண, அரசியல் ஆதரவானது நட்புறவு நாடுகளால் வழங்கப்பட்டாலேயே பொறுப்பை துருக்கி ஏற்குமென அகர் கூறியுள்ளார்.
1 hours ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
3 hours ago