2023 பெப்ரவரி 02, வியாழக்கிழமை

`சார்ஜர்களின்` பயன்பாடு குறித்து புதிய சட்டம்

Ilango Bharathy   / 2022 ஒக்டோபர் 06 , மு.ப. 09:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில், பல வகையான சார்ஜர்களின் பயன்பாட்டை நிறுத்தும் வகையில்  புதிய சட்டமொன்று இயற்றப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில், ஸ்மார்ட் தொலைபேசிகள்  மற்றும் டப்லெட்டுகள் உட்பட பல்வேறு மின்னணு சாதனங்களுக்குப்  பொதுவான சார்ஜர்களை (மின்னேற்றி)  பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தின் செய்திக்குறிப்பில் “புதிய சட்டத்திற்கு ஆதரவாக 602 வாக்குகளும் எதிராக 13 வாக்குகளும் பதிவாகியுள்ளன. 8 உறுப்பினர்கள் புறக்கணிப்புச் செய்துள்ளனர்.

இதற்கு அமைவாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் 2024 ஆம் ஆண்டு  முதல், யுஎஸ்பி (USB) டைப்- C வகை சார்ஜர்களே பயன்படுத்தப்படும்.

எனவே இனி தயாரிக்கப்படும் கேபிள் வழியாக  சார்ஜ் செய்யக்கூடிய 100 வோட்ஸ் வரை மின்திறன் கொண்ட அனைத்து ‘புதிய தொலைபேசிகள், டப்லெட்டுகள், டிஜிட்டல் கெமராக்கள், ஹெட்போன்கள் ,ஹெட்செட்கள், போர்ட்டபிள் ஸ்பீக்கர்கள், இயர்பட்கள் மற்றும் மடிக்கணினிகளில்‘ USB Type C வகை சார்ஜிங் போர்ட் (குதை ) பொருத்தப்பட்டிருக்க வேண்டும்”  எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்னணு கழிவுகளைக் குறைக்கவும், நுகர்வோரை  மேம்படுத்தவுமே இப் புதிய  சட்டம் இயற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பயன்படுத்தப்படாத சார்ஜர்களால், ஆண்டுக்கு சுமார் 11,000 தொன் மின் கழிவுகள் வெளியேறுகின்றன. ஆகவே இந்நடவடிக்கை, சுற்றுச்சூழலுக்கும் நுகர்வோருக்கும் நன்மை பயக்கும் என்றும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .