2023 ஒக்டோபர் 03, செவ்வாய்க்கிழமை

உரிமையாளரின் உயிரைப் பறித்த பூனை

Ilango Bharathy   / 2022 டிசெம்பர் 21 , மு.ப. 09:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 டென்மார்க்கைச்  சேர்ந்த  ‘ஹென்ரிக் க்ரீக்பாம் பிளெட்னர்‘ என்பவர் கடந்த 2018ஆம் ஆண்டு பெண் பூனையொன்றை வளர்த்து வந்துள்ளார்.

 இந்நிலையில் குறித்த பூனையானது ஹென்ரிக்கின் ஆட்காட்டி விரலை ஒருமுறை கடித்துள்ளதாகக் கூறப்படுகின்றது.

எனினும் விரலில் ஏற்பட்ட காயத்தை அலட்சியப்படுத்திய ஹென்ரிக், அவரது கை வழக்கத்தை விடவும்  இரண்டு மடங்கு வீக்கம் அடைந்த பின்னரே அதன் தீவிரத்தை உணர்ந்துள்ளார்.

இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஹென்ரிக்கு  15 முறைகள்  அறுவைச்  சிகிச்சைகள்  மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அறுவைச் சிகிச்சைகளுக்குப்  பின்னர் 4 மாதங்கள் கழித்து மீண்டும் அவரது உடல் நிலை மோசமடைந்துள்ளதாகவும், இதனையடுத்து அவரை பரிசோதித்துப் பார்த்ததில் அவரது நாளங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த 4 ஆண்டுகளாக  மருத்துவ கண்காணிப்பில் இருந்த அவர் கடந்த ஒக்டோபர் மாதம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் ”பூனைகளின் வாயில் பல வகையான பக்றீரியாக்கள்  காணப்படுவதாகவும், பூனை கடித்தால்  அலட்சியப்படுத்தாமல், உடனடியாக மருத்துவரை  நாட வேண்டும் எனவும், பூனை கடிப்பதால் ஏற்படும் காயங்கள் மூலம் பல தொற்று நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் மருத்துவர்கள்  எச்சரித்துள்ளனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .