2023 ஜூன் 01, வியாழக்கிழமை

சவப்பெட்டியை உடைத்து மண்டை ஓட்டுக்கு முத்தமிட்ட நபர்

Ilango Bharathy   / 2023 மார்ச் 02 , மு.ப. 10:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சீனாவில்  நபர் ஒருவர்,  பழமைவாய்ந்த மயானமொன்றில் அடக்கம் செய்யப்பட்டிருந்த சவப்பெட்டியை உடைத்து, அதிலிருந்த மண்டை ஓட்டுக்கு முத்தம் கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென் என்பவரே இவ்வாறு தனது இரு நண்பர்களுடன் சேர்ந்து,இச்செயலில் ஈடுபட்டுள்ளார்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகவே கடந்த வருடம் இடம்பெற்ற இச்சம்பவம்  தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இந்நிலையில் பொலிஸாரின் விசாரணையில் ”சமூக வலைதளங்களில் கவனம் ஈர்க்கவே தான் தனது நண்பர்களுடன் இணைந்து இச்செயலில் ஈடுபட்டதாக சென்  தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து குறித்த நபருக்கு 9 மாதம் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .