Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Ilango Bharathy / 2022 மே 03 , மு.ப. 09:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆபாசப்படம் பார்த்ததால் எம்.பி ஒருவர் தனது பதவியை இராஜினாமா செய்த சம்பவம் பிரித்தானியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவில் பிரதமர் போரிஸ் ஜோன்சன் தலைமையிலான ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியினைச் சேர்ந்தவர் 65 வயதான நீல் பாரிஷ் (Neil Parish).
விவசாயியான இவர் கடந்த 2010ஆம் ஆண்டு முதல் பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்து வந்தார்.
இந்நிலையில் அண்மையில் இவர் பாராளுமன்ற கீழவையின் கூட்டத்தொடரின் போது தனது தொலைபேசியில் 2 முறை ஆபாச படம் பார்த்ததாகக் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.
குறிப்பாக நீல் பாரிஷ் தனது சக பெண் எம்.பி.க்கு அருகில் அமர்ந்து ஆபாச படம் பார்த்ததை அப் பெண் எம்.பி. ஊடகத்திடம் தெரியப்படுத்தியதை தொடர்ந்து இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.
இதனையடுத்து இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதோடு ஆளும் கட்சி மீது கடுமையான விமர்சனங்களும் எழுந்தன.
இதற்கிடையில் பாராளுமன்ற நிலைக்குழு ஆணையரிடம் கூட்டத்தொடரின்போது தான் ஆபாச படம் பார்த்ததை நீல் பாரிஷ் ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து நீல் பாரிசை கட்சியில் இருந்து நீக்குவதாக கன்சர்வேட்டிவ் கட்சி அறிவித்தது.
தன்மீதான விசாரணை முடியும் வரை எம்.பி. பதவியில் தொடர்வேன் என நீல் பாரிஷ் கூறினார். ஆனால் திடீர் திருப்பமாக கடந்த 29 ஆம் திகதி அவர் தனது எம்.பி. பதவியை இராஜினாமா செய்தார்.
இது குறித்து அவர் பத்திரிகையாளர்களிடம் கூறுகையில், ”ஒரு இணையதளத்தில் டிரக்டர்கள் குறித்து தேடிக் கொண்டிருக்கும்போது தற்செயலாக தடை செய்யப்பட்ட ஆபாச படத்தை பார்க்க நேர்ந்தது. அதை பார்க்க கூடாதுதான். ஆனால் அந்த நேரத்தில் நான் சற்று தடுமாறி, சிறிது நேரம் அதை பார்த்தேன்” நான் செய்ததை நியாயப்படுத்த போவதில்லை. நான் செய்தது முற்றிலும், தவறு. நான் என் உணர்வுகளை கட்டுப்படுத்தியிருக்க வேண்டும் ”என்றார்.
அத்துடன் ”எனது செயலால் எனது குடும்பம், தொகுதி மக்கள் ஆகியோர் என்னால் கோபமடைந்திருப்பதையும் காயமடைந்திருப்பதையும் காண முடிந்தது. எனவே இப்பதவியைத் தொடர நான் தகுதியற்றவனாக உணர்கின்றேன் ” என்றார்.
6 minute ago
38 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
38 minute ago
2 hours ago