2021 ஒக்டோபர் 22, வெள்ளிக்கிழமை

சீனாவுக்கு எதிராக 3 நாடுகள் கூட்டணி

Ilango Bharathy   / 2021 செப்டெம்பர் 17 , மு.ப. 07:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தோ பசிபிக் கடல் பகுதியில் சீனாவின் அதிகாரத்தைக் கட்டுக்குள் கொண்டு வர அமெரிக்கா, பிரித்தானியா, அவுஸ்திரேலியா ஆகிய மூன்று நாடுகள் பாதுகாப்புக் கூட்டணி அமைத்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் அறிவித்துள்ளார்.

பிரித்தானியா மற்றும் அவுஸ்திரேலிய பிரதமர்களுடன் ஜோ பைடன் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையிலையே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
 AUKUS என்ற இப் புதிய கூட்டணி இந்தோ பசிபிக்கை பாதுகாப்பான பிரதேசமாக மாற்றும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவுக்கு அணு ஆயுதம் தாங்கி நீர்மூழ்கிக் கப்பல் படையை உருவாக்குவது இக்கூட்டணியின் முதல் செயல்திட்டமாக உள்ளதாகக் கூறப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X