2021 டிசெம்பர் 03, வெள்ளிக்கிழமை

பிரேஸில் ஜனாதிபதி மீது வழக்குப் பதிவு

Ilango Bharathy   / 2021 ஒக்டோபர் 21 , பி.ப. 05:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரேஸிலில் கொரோனாத் தொற்றுப் பரவலை   மோசமாகக் கையாண்ட அந்நாட்டு  ஜனாதிபதி  ஜெய்ர் பொல்சொனாரோ  ( Jair Bolsonaro) மீது குற்ற வழக்குபதிவு செய்யும் பரிந்துரையை பாரளுமன்ற உறுப்பினர் குழு கொண்டு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்நாட்டில் கொரோனாத் தொற்றுப் பரவல் தீவிரமடைந்த போது ஜனாதிபதி  பொல்சொனாரோ அறிவியல் ரீதியாக உரிய நடவடிக்கை எடுக்காமல், கொரோனா  குறித்து தவறான தகவல்களை மக்களிடத்தில் பதிவு செய்து வந்தார்.

குறிப்பாக முகக் கவசம் அணியத் தேவையில்லை என்றும்   கொரோனாத்  தடுப்பூசி செலுத்துவது அவசியமற்றது எனவும் தெரிவித்து வந்தார். இதனால் அவர் மீது உலக அளவில் கண்டனம் எழுந்தது.

இந்நிலையில் இவர்  மீது அந்நாட்டு  எதிர்க் கட்சி எம்பிக்கள் கொலை உட்பட 13 குற்ற வழக்குகளை பதிவு செய்து விசாரணையை நடத்த வேண்டும் என்ற பரிந்துரையைக் கொண்டு வந்துள்ளனர்.

இப் பரிந்துரை மீதான வாக்கெடுப்பு  நாடாளுமன்றத்தில் அடுத்த வாரம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X