2021 ஒக்டோபர் 26, செவ்வாய்க்கிழமை

வளர்ப்பு நாய்களை இறைச்சிக்காக கொடுக்க உத்தரவிட்ட கிம்

Editorial   / 2020 ஓகஸ்ட் 19 , மு.ப. 10:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

உணவுப் பற்றாக்குறையால் வளர்ப்பு நாய்களை ஒப்படைக்கும்படி வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் தலைமையிலான அரசு உத்தரவிட்டுள்ளது.

உலக நாடுகள் மட்டுமல்லாது அண்டை நாடான தென் கொரியாவுடன் முறைப்பு, குதர்க்கமாகவே பேசிக் கொண்டிருக்கும் இளம் அதிபர் கிம் ஜாங். இவர் தலைமையிலான வட கொரியா நாட்டில் தற்போது உணவுப் பற்றாகுறை ஏற்பட்டுள்ளது.

இதனால் அரசு, மக்களிடம் உள்ள வளர்ப்பு நாய்களை இறைச்சிக்காக ஒப்படைக்குமாறு கூறியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் வீட்டில் நாய் வளர்க்கக்கூடாது எனவும் அப்படி வளர்ப்பது முதலாளித்துவத்தின் சிந்தாந்தத்தின் கறைபடிந்த போக்கு என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் நாட்டில் உணவுப் பற்றாக்குறையை போக்க இப்படி அதிரடியாக அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார். இதனால் மக்கள் கடுமையான விமர்சனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .