2025 ஒக்டோபர் 19, ஞாயிற்றுக்கிழமை

இம்ரான்கானுக்கு பிடியாணை; நீதிமன்றம் உத்தரவு

Ilango Bharathy   / 2023 மார்ச் 30 , பி.ப. 03:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது பண மோசடி, வன்முறையை துண்டுதல் உள்ளிட்ட பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை இடம்பெற்று வருகின்றது.

இதில் எந்தவொரு வழக்கின் விசாரணையிலும் இம்ரான்கான் நேரில் ஆஜராகததால் அவருக்கு எதிராக பிடியாணை  பிறப்பிக்கப்பட்டது. எனினும் இந்த வழக்குகளில் அவர்  பிணை பெற்றார்.

இந்நிலையில் பெண் நீதிபதிக்கு மிரட்டல் விடுத்த வழக்கில் தற்போது இம்ரான்கானுக்கு பிணையில் வெளிவர முடியாத வகையில் பிடியாணை  பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய இம்ரான்கான்  நீதிபதி ஜெபா சவுத்ரிக்கு மிரட்டல் விடுத்தது தொடர்பாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டு இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது.

இது தொடர்பான விசாரணைக்கு இம்ரான்கான் இதுவரை நேரில் ஆஜராகாத நிலையில் நேற்றைய தினம் அவருக்கு எதிராக பிணையில் வெளிவர முடியாத பிடியாணை பிறப்பித்த நீதிபதி, அவரை ஏப்ரல் 18ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .