2022 ஜனவரி 23, ஞாயிற்றுக்கிழமை

செய்யாத குற்றத்திற்காக 24 ஆண்டுகள் சிறை

Ilango Bharathy   / 2021 நவம்பர் 16 , மு.ப. 06:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

செய்யாத குற்றத்திற்காக நபர் ஒருவர் 24 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்த சம்பவம் அமெரிக்காவில்  இடம்பெற்றுள்ளது.

அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தில் 1995ஆம் ஆண்டு போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் என்பவரைக் கொலை செய்த குற்றச்சாட்டில் 19 வயதான டோண்டே ஷார்ப் (Dontae Sharpe)என்பவர் கைது செய்யப்பட்டார்.  

மேலும்  ஷார்ப் கொலை செய்ததை நேரில் கண்டதாக 15 வயது சிறுமி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ஷார்ப் சிறையில் அடைக்கப்பட்டார்.

இருப்பினும் தன் மீதான குற்றத்தை முறையாக விசாரிக்கவும், தான் நிரபராதி எனவும் கூறி ஷார்ப் மேல்முறையீடு செய்தார். அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் கொலைக் குற்றத்தை நேரில் கண்டதாகத் தெரிவித்த சிறுமி சம்பவம் நடைபெற்ற இடத்தில் இல்லை என்பது தெரியவந்தது. 

இந்நிலையில் செய்யாத குற்றத்திற்காக தண்டனை பெற்ற ஷார்பிற்கு  இழப்பீட்டு தொகையாக 7 லட்சத்து 50 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் வரை வழங்கப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X