2023 பெப்ரவரி 02, வியாழக்கிழமை

அப்பிள் நிறுவனத்துக்கு 731 கோடி ரூபாய் அபராதம்

Ilango Bharathy   / 2022 ஒக்டோபர் 17 , மு.ப. 09:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரேசிலில் சார்ஜர் இல்லாத ஐபோன்களுக்குத்  தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஐபோன் 13 ரக போன்களை சார்ஜரின்றி அப்பிள் நிறுவனம் விற்பனை செய்த காரணத்திற்காக, அந்நிறுவனத்திற்கு இலங்கை மதிப்பில் 731 கோடி ரூபாய் அபராதம் விதித்து பிரேசில் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மேலும், இது வாடிக்கையாளர்களைக்  கூடுதல் தயாரிப்புகளை வாங்க கட்டாயப்படுத்தும் தவறான நடைமுறை எனத்  தெரிவித்த நீதிமன்றம், பிரேசிலில் கடந்த 2 ஆண்டுகளில் ஐபோன் 12 அல்லது 13 ரக போன்களை வாங்கியவர்களுக்கு சார்ஜர் வழங்கவும் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .