2021 டிசெம்பர் 03, வெள்ளிக்கிழமை

கொலைகள், மதமாற்றத்தால் பாகிஸ்தான் சீக்கியர்கள் துயரம்

Editorial   / 2021 ஒக்டோபர் 19 , பி.ப. 02:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

இஸ்லாமாபாத் (பாகிஸ்தான்)

பாகிஸ்தானிலுள்ள சீக்கியர்கள் தொடர்ச்சியாக  வன்முறைகள், கொலைகள், கட்டாய மதமாற்றம் என்று சொல்லொணா துயரங்களை அனுபவித்து வருகின்றனர். 2014ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் இத்தகைய துயரங்களால் அவர்களின் வாழ்க்கையே கேள்விக்குறியாகியுள்ளது.

அண்மையில் அதாவது செப்டம்பர் 30ஆம் திகதியன்று யுனானி மருத்துவ பயிற்சியாளரான சீக்கியர் ஒருவர் கைபர் பக்துன்க்வா மாகாணத்திலுள்ள பெஷாவரில்  அவருடைய மருத்துவமனைக்குள் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார். பின்னர் இஸ்லாமிய அரசு (டாஹேஸ்) என்னும் அமைப்பு  இந்தக்கொலைக்கு உரிமை கோரியது.

மலேஷியாவில் வசித்த ரவீந்தர் சிங் என்பவர் கடந்த ஜனவரி மாதம் தனது திருமணத்துக்காக பாகிஸ்தானிலுள்ள தனது வீட்டுக்குத்  திரும்பியிருந்தார். இவர் பக்துன்க்வா மாகாணத்திலுள்ள   மர்டான் நகரத்தில் வைத்து கொல்லப்பட்டார்.

 நாட்டில் தொடர் கொலைகள், வன்முறைகள், கட்டாய மதமாற்றங்கள் பரவிவருவதன் காரணமாகவும், இம்மக்களுக்கு சட்டரீதியான பாதுகாப்பு இல்லாததாலும் இந்த சிறுபான்மை இனத்தின் சனத்தொகை படிப்படியாகக் குறைந்து வருவதாக சீக்கிய உரிமைவாதிகள் கூறுவதாக டெய்லி சிக்(னுயடைல ளுiமா) பத்திரிகை தெரிவித்தது.

சீக்கிய  மக்களின்  சனத்தொகை சரிவுக்கு பின்னணியில் உள்ள முக்கிய காரணம் என்னவெனில் கட்டாய மதமாற்றமே என்று சிறுபான்மை உரிமை ஆர்வலரும் லாஹூர் ஜிசீ  கல்லூரி பல்கலைக்கழக பேராசிரியருமான கல்யாண்சிங் கூறினார்.

பாகிஸ்தான்  தேசிய சனத்தொகை கணக்கெடுப்பு மற்றும் பதிவு ஆணையத்தின்படி பதிவு செய்யப்பட்ட 6,146 சீக்கியர்களே உள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது. எனினும்  என்ஜிஓ  சீக்கிய வள மற்றும் ஆய்வு மைய(ளுசுளுஊ) கணக்கின்படி பாகிஸ்தானில் 50,000 சீக்கியர்கள் இன்னும் வாழ்கின்றனர். இதேவேளை அமெரிக்க  வெளியுறவுத்துறை பாகிஸ்தானில் 20,000  சீக்கியர்கள் வாழ்வதாக தெரிவிக்கிறது. எப்படியிருந்தபோதிலும் 2017ஆம் ஆண்டு சனத்தொகைக் கணக்கெடுப்பில் சீக்கியர்கள் உள்ளடக்கப்படவில்லை. அவர்களின்  சரியான எண்ணிக்கை தெரியவில்லை. சிந்தியர்கள் மற்றும் பஞ்சாபியர்களைத் தொடர்ந்து பெரும்பாலான சீக்கியர்கள்  கைபர் பக்துன்க்வா மாகாணத்திலேயே குடியேறியுள்ளனர்.

சீக்கிய மக்கள் நாட்டில் இன்னொரு வடிவத்திலான வன்முறையையும் எதிர்நோக்கியுள்ளனர். ஹார்மீட் சிங் என்னும் செய்தித் தொகுப்பாளர் அச்சுறுத்தல் தொலைபேசி அழைப்புகளை  எதிர்நோக்கி வருகிறார். இப்படி பல தொலைபேசி அழைப்புகள் வரும் நிலையிலும் போலீஸாரின் நடவடிக்கை இல்லாத நிலையிலும் பாகிஸ்தானை விட்டு வெளியேறுவதைத்தவிர வேறு வழி எனக்குத் தெரியவில்லையென்று அவர் கூறியதாக டெய்லி சிக் பத்திரிகை தெரிவித்தது.

2007ஆம் ஆண்டில் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் சீக்கியர்கள் வாழும் பழங்குடி  பகுதிகளில் முஸ்லிம் நாட்டில் வாழும் முஸ்லிம் அல்லாதோரிடம் பாகிஸ்தான் தலிபான்கள்   ஜிஸ்யா (துணைலய) என்னும் வரியை விதித்தனர். இந்த ஜிஸ்யாவை செலுத்த  மறுத்ததால்  பதினொரு சீக்கிய குடுப்பங்களின் வீடுகளை தலிபான்கள்  சேதப்படுத்தி அழித்தனர்.

 2010ஆம் ஆண்டில் ஜிஸ்யா செலுத்தமுடியாமல் போன ஒரு குடும்பத்தின் ஜஸ்பால் சிங் என்னும் இளைஞனின் தலை துண்டிக்கப்பட்டதாக டெய்லி சிக்  பத்திரிகை தெரிவித்தது.

தனிப்பட்ட  விரோதம் முதல் பொருளாதார மற்றும் தொழில்முறை வரை  சீக்கியர்கள் மீதான வன்முறைகள் பரவலாக தொடர்ந்த வண்ணமுள்ளன.

பாகிஸ்தான் பல சந்தர்ப்பங்களில் நாட்டில் சிறுபான்மை இனத்தவர்களைப் பாதுகாப்பதாக உறுதியளித்துள்ளது. ஆனால் சிறுபான்மையினர் அங்கு தாம் அனுபவிக்கும் துன்பங்கள் பற்றிக்கூறுவது இந்த உறுதிமொழிக்கு எதிராக இருக்கிறது.  

 

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X