Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Freelancer / 2021 ஒக்டோபர் 09 , பி.ப. 10:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
எரிபொருள் பற்றாக்குறையால் லெபனான் நாட்டில் மின்சார தடை ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மிகப்பெரிய இரண்டு மின் உற்பத்தி நிலையங்கள் மூடப்பட்ட பின்னர் லெபனானில் உருவாக்கப்படும் மின்சாரம் தடைப்பட்டுள்ளது.
லெபனான் மின்சார வலையமைப்பு இன்று நண்பகலில் வேலை செய்வதை முற்றிலுமாக நிறுத்தியது என்றும் எதிர்வரும் திங்கட்கிழமை வரை அல்லது பல நாட்களுக்கு வேலை செய்ய வாய்ப்பில்லை என்று ஒரு அரச அதிகாரி இன்று உறுதிப்படுத்தியுள்ளார்.
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக வெள்ளிக்கிழமை டீர் அம்மர் மின் உற்பத்தி நிலையம் நிறுத்தப்பட்ட பின்னர், ஜஹ்ரானி மின் நிலையமும் நிறுத்தப்பட்டுள்ளது.
இராணுவத்தின் எரிபொருள் எண்ணெய் இருப்பைக் கொண்டு தற்காலிகமாக மின் நிலையங்களை இயக்க அரச மின்சார நிறுவனம் முயற்சிக்கும் என்றபோதும் அது விரைவில் நடக்காது என்று அந்த அதிகாரி கூறியுள்ளார்.
பல லெபனான் மக்கள் பொதுவாக டீசலில் இயங்கும் தனியார் ஜெனரேட்டர்களை நம்பியுள்ளனர். இருப்பினும் அது பற்றாக்குறையாக உள்ளது என்றும் அந்த செய்தி தெரிவிக்கிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
05 Jul 2025
05 Jul 2025