2022 ஜனவரி 17, திங்கட்கிழமை

’பூஸ்டர் தடுப்பூசி ஒரு ஊழல் ’

Ilango Bharathy   / 2021 நவம்பர் 15 , பி.ப. 12:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

பூஸ்டர் தடுப்பூசி என்பது ஒரு ஊழல் என்றும் அதனை உலக நாடுகள் தடுக்க வேண்டும் என்றும் உலக சுகாதார ஸ்தாபனத்தின்  தலைவர் டெட்ரோஸ்  அதானோம் (Tedros Adhanom ) தெரிவித்துள்ளார்.

இது  குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”வருமானம் குறைவாக உள்ள நாடுகளில் செலுத்தப்படும் முதலாம் கட்டத் தடுப்பூசியை விடவும் வளர்ந்த நாடுகளில் ஒவ்வொரு நாளும் சராசரியாக 6 மடங்கு அதிக அளவில் பூஸ்டர் தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன.

மேலும், ஏழை நாடுகளில் முன்களப் பணியாளர்கள், வயதானவர்கள் உள்ளிட்ட பலருக்கும் இதுவரை  ஒரு தடுப்பூசிக்கூடச்  செலுத்தப்படாமல் உள்ள நிலையில், வளர்ச்சி அடைந்த நாடுகளில் ஆரோக்கியமானவர்களுக்கும், குழந்தைகளுக்கும் பூஸ்டர் தடுப்பூசி தடுப்பூசிகள் செலுத்தப்படுவதில் எந்த அர்த்தமும் இல்லை” எனக் கவலை தெரிவித்துள்ளார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .