Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Ilango Bharathy / 2021 ஒக்டோபர் 22 , மு.ப. 09:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஈரானில் முகத்தை மூட மறுத்த பெண்ணை நாய் பிடிக்கும் கருவியைக் கொண்டு பொலிஸார் கைது செய்துள்ளதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரானில் பெண்கள் முகத்தை மூடும்படியான உடையினை அணிய வேண்டும் என்ற சட்டம் உள்ளது.
இதனைக் கண்காணிக்க கலாசாரக் காவலர்கள் என்ற தனிப்பிரிவும் காணப்படுகின்றது. இப்பிரிவினர் இஸ்லாமியக் கலாசாரத்தை முறையாகப் பின்பற்றாதோரை கைது செய்வதோடு சிறைத் தண்டனை விதிக்கும் நடைமுறையும் காணப்படுகின்றது.
இந்நிலையில், பொதுவெளியில் முகத்தை மூடும்படியான உடையை அணியாத பெண் ஒருவரை வலுக்கட்டாயமாக இழுத்து நாயைப் பிடிக்கப் பயன்படுத்தப்படும் கருவியைக் கொண்டு பொலிஸார் கைது செய்யும் வீடியோயொன்று இணையத்தில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எனினும் இக் குற்றச்சாட்டை மறுத்துள்ள அந்நாட்டுப் பொலிஸார் ”விபசாரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டிலேயே குறித்த பெண்ணைக் கைது செய்ய முயன்றதாகவும் அவர் ஆவேசமாக நடந்து கொண்டதாலேயே சில கடுமையான முறைகளைப் பயன்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்
காண்போரை அதிரச் செய்யும் இவ் வீடியோவுக்கு இணையத்தில் பலரும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
6 hours ago
8 hours ago