2021 ஜூலை 27, செவ்வாய்க்கிழமை

உலகின் மூன்றாவது பெரிய வைரம்

Shanmugan Murugavel   / 2021 ஜூன் 17 , மு.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகின் மூன்றாவது மிகப்பெரியதாக நம்பப்படும் வைரம் ஒன்று பொட்ஸ்வானாவில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

1,098 கரட்கள் எடையுள்ள குறித்த கல்லானது பொட்ஸ்வானா ஜனாதிபதி மொக்வீட்சி மஸிஸியால் காண்பிக்கப்பட்டுள்ளது. வைர நிறுவனமான டெப்ஸ்வானாவால் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு வாரங்களிலேயே குறித்த வைரம் காண்பிக்கப்பட்டுள்ளது.

பொட்ஸ்வானாவில் கடந்த 2015ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட உலகின் இரண்டாவது மிகப் பெரிய வைரத்தை சிறிதே இது எடை குறைந்ததாகும்.

உலகின் மிகப்பெரிய வைரமானது தென்னாபிரிக்காவில் 3,106 கரட் உடையதாக கடந்த 1905ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .