Freelancer / 2021 நவம்பர் 27 , மு.ப. 08:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
தென் ஆபிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய கொவிட் வைரஸ் புறழ்விற்கு, உலக சுகாதார ஸ்தாபனம் “ஒமிக்ரோன்” (OMICRON) என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
உலக சுகாதார ஸ்தாபனத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த புதிய பிறழ்வானது, தடுப்பூசிகளுக்கும் கட்டுப்படாதது என கண்டறியப்பட்டுள்ளது.
B.1.1.529 என்ற இந்த வைரஸ பிறழ்வு தொடர்பான தகவல், முதல் தடவையாக கடந்த 24ம் திகதியே உலக சுகாதார ஸ்தாபனத்திற்கு உறுதிப்படுத்த முடிந்துள்ளது.
கடந்த 9ம் திகதி பெற்றுக்கொள்ளப்பட்ட மாதிரிகளின் ஊடாகவே இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
டெல்டா பிறழ்வை போன்றே, இதுவும் ஆபத்தானது என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தென் ஆபிரிக்காவின் அனைத்து மாகாணங்களிலும் இந்த வைரஸ் தற்போது பரவி உள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .