2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

திபேத்திய எழுத்தாளர் மரணம்

Editorial   / 2021 செப்டெம்பர் 19 , பி.ப. 05:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீன அரசாங்கக் கொள்கைகளை விமர்சித்த குற்றச்சாட்டில் 2010ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு மூன்று வருடகாலம் சிறைவாசம் அனுபவித்து விடுதலையான  34 வயது எழுத்தாளர் நோயுற்ற நிலையில் மரணமடைந்தார்.

சிறைவாசம் அனுபவித்துவிட்டு எட்டு வருடகாலமாக நோயுற்ற நிலையில் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்த இவர் சிச்சுவான் தலைநகரான செங்டுவில் இவ்வாரம் காலமானார் என்று திபேத்திய வட்டாரங்கள் தெரிவித்தன.

ஷிங்லோ மார்ப்லோ என்னும் புனைபெயரில் எழுதி வந்த பிக்குவான இவரின் பெயர் ரா ஷேரிங் தொன்டப் என்பதாகும். இவர் சிச்சுவானிலுள்ள ரோங்தா மடாலயத்தைச்சேர்ந்தவர்.

தோன்டப் 2010 ஆம் ஆண்டு ஒரு சஞ்சிகையை வெளியிட்டார். இச்சஞ்சிகையில் இவர் சீன கம்யூனிஸ அரசாங்கத்தை விமர்சித்து எழுதியமைக்காகவே கைது செய்யப்பட்டதாக தற்பொழுது இந்தியாவில் வசிக்கும் இவரின் நண்பரும் முன்னாள் சகாவுமான ஜென்டுன் ஷேரிங் என்பவர் ஆர். எஃப். ஏ. திபேத்திய (RFA’s Tibetan Service) சேவைக்குக் கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்

இவர்; மியான்யாங் சிறைச்சாலையிலேயே மூன்று வருட காலம் சிறைவாசம்  அனுபவித்தார். 2013ஆம் ஆண்டு விடுதலையான அவர் நோயுற்ற நிலையில் இருந்து பின்னர் கல்லீரல் நோய்க்குள்ளாகி மரணமடைந்தார்.

தோன்டப், இன்னொரு நண்பர், மற்றும் நான் மூவரும் இணைந்தே அந்த சஞ்சிகையை நடத்தினோம். ஆனால் அச்சஞ்சிகை ஒருமுறைதான் வெளிவந்தது. என்று அவர் கூறினார்.

சிறையில் கடுமையான சிகிச்சை, மருத்துவ பராமரிப்பு இல்லாமை என்பனவே தொன்டப்பின் உடல்நிலை மோசமடைந்ததற்குக் காரணம். இதனால் அவர் விடுதலையாகியிருந்த எட்டு வருட காலத்தில் அவரின் உடல்நிலை மிக மோசமாகப் பாதித்தது என்று இந்தியாவை தளமாகக் கொண்ட மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்துக்கான தர்மசாலையின் ஆய்வாளர்   டென்ஸின் டாவா கூறினார்.

நோயுற்ற நிலையில் துன்பப்படும் திபேத்திய அரசியல் கைதிகள் சில சமயங்களில் அவர்களின் தண்டனைக்காலம் முடிவடையுமுன்னர் அபாயகரமான நிலையிலேயே விடுவிக்கப்படுகின்றனர். இப்படி விடுதலையான பின்னர் அல்லது சிறையிலிருந்தபோது மரணித்த ஏழு நிகழ்வுகள் கடந்த வருடத்தில் இடம்பெற்றுள்ளன. தடுப்பின்போது சித்திரவதைக்குள்ளான சம்வங்களும் இடம்பெற்றுள்ளன என்று ஆதாரங்கள் மூலம் தெரிய வருகின்றது. அவர்களின் குற்றங்களுக்கான பொறுப்பை தவிர்க்க சீன அரசாங்கம்  மேற்கொள்ளும் வழி இதுவாகும் என்றும் டாவா கூறினார்.

திபெத் முன்னர் ஒரு சுதந்திர நாடாக இருந்துது. ஆனால் 70 வருடங்களுக்கு முன்னர் சீனாவினால் பலாத்காரமாகக் கையகப்படுத்தப்பட்டது.

சீன அதிகாரிகள் இப் பிராந்தியத்தில் கடும்போக்கு பராமரிப்பை மேற்கொள்கின்றனர். திபேத்திய மத அனுஸ்டானங்கள், அரசியல் நடவடிக்கைகள், கலாசார செயல்பாடுகள், அடையாளம் போன்றவற்றை அவர்கள் கேள்விக்குறியாக்குகின்றனர். அத்துடன் திபேத்தியர்களை துன்புறுத்துதல், சிறைவாசத்துக்குள்ளாக்குதல் மற்றும் சட்டத்திற்கு மாறான கொலைகளுக்குள்ளாக்குதல் போன்றவற்றில் ஈடுபடுகின்றனர் என்று தெரிவிக்கப்படுகிறது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .