2021 நவம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

உயிர் காத்த அலைபேசி

Ilango Bharathy   / 2021 ஒக்டோபர் 15 , மு.ப. 08:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரேஸிலில் பெட்ரோலினா நகரில் அண்மையில்  கொள்ளையர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டிலிருந்து , நபரொருவரின் உயிரைத் தொலைபேசியொன்று காப்பாற்றிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவத்தின் போது பெட்ரோ என்பவரை நோக்கி கொள்ளையன் ஒருவன் துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் அவரது சட்டைப் பையில் (Shirt pocket ) வைத்திருந்த 5 ஆண்டுகள் பழமையான மோட்டரோலா தொலைபேசியானது அவர் மீது பாய இருந்த தோட்டாவைத்  தடுத்து நிறுத்தியுள்ளது.
 

இதனையடுத்து இடுப்பில் லேசான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெட்ரோ சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பினார்.

இந்நிலையில் டிஸ்ப்ளே சேதமடைந்த அத் தொலைபேசியின் புகைப்படத்தை அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

குறித்த புகைப்படமானது தற்போது  இணையத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .