Ilango Bharathy / 2022 ஜூலை 06 , மு.ப. 09:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் அமைந்துள்ள இறுதிச் சடங்கு இல்லம் ஒன்றில்
அண்மையில் அழுகிய நிலையில் 31 சடலங்கள் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் மீட்கப்பட்ட சடலங்களை அடையாளம் காணும் பணிக்காக அருகாமையில் உடற்ககூறு ஆய்வாளர் அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், இது குறித்து இறுதிச்சடங்கு இல்லத்தில் உரிமையாளரிடம் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸாரின் விசாரணையில் ”மீட்கப்பட்ட சடலங்களில் கடந்த மார்ச் மாதத்தில் இருந்தே, குறித்த இறுதிச் சடங்கு இல்லத்தில் காணப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது. அது மட்டுமில்லாமல் 16 பேர்களின் சடலங்கள் எரியூட்டப்பட்ட நிலையில் இருந்தன” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
9 hours ago
04 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
04 Nov 2025