2021 ஜூலை 28, புதன்கிழமை

ஈரான் அணு மின் நிலையம் மூடப்பட்டது

Shanmugan Murugavel   / 2021 ஜூன் 21 , மு.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஈரானின் ஒரேயொரு அணு மின் நிலை நிலையமான புஷெஹ்ரானது, தொழில்நுட்ப மாற்றம் ஒன்றுக்காக தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரச தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

இந்த நிலைய மூடலானது நேற்று முன்தினம் ஆரம்பித்ததாகவும், மூன்று தொடக்கம் நான்கு நாள்களுக்கு நீடிக்கும் எனவும் அரச மின் சக்தி நிறுவனத்தின் அதிகாரி ஒருவரான கொலமலி ரக்‌ஷனிமெஹ்ர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இதன் காரணமாக மின் தடை ஏற்படலாம் எனவும் ரக்‌ஷனிமெஹ்ர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறெனினும், இந்நிலையத்தை அவசரமாக மூடுவதாக ஈரான் அறிவிப்பது இதுவே முதற் தடவை ஆகும்.

ரஷ்யாவின் உதவியுடன் 2011ஆம் ஆண்டு இந்நிலையம் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. ரஷ்யாவில் தயாரிக்கப்படும் யுரேனியத்தாலேயே இந்நிலையம் இயங்குவதுடன், ஐக்கிய நாடுகளின் சர்வதேச அணு சக்தி முகவரகத்தால் கண்காணிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .