2022 ஜனவரி 22, சனிக்கிழமை

மகளை களமிறக்கும் ஜனாதிபதி

Nirosh   / 2021 நவம்பர் 14 , பி.ப. 01:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்ரிகோ டுட்ரேடின் மகள் சாரா டுட்ரேட் அந்நாட்டு துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

ரொட்ரிகோ டுட்ரேடின் ஆட்சிக்கு பிலிப்பைன்ஸில் கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், அடுத்த தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை அறிவித்திருந்தாலும், ஜனாதிபதித் தேர்தலில் தனது மகள் போட்டியிடுவார் எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட சாரா டுட்ரேட் மனுத் தாக்கல் செய்துள்ளார். 43 வயதான சாரா, லாகாஸ் கிறிஸ்துவ முஸ்லிம் ஜனநாயக கட்சியின் சார்பாக போட்டியிட மனுத் தாக்கல் செய்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X