2021 ஒக்டோபர் 22, வெள்ளிக்கிழமை

‘காலை ஒருபோதும் வெட்ட மாட்டேன்‘

Ilango Bharathy   / 2021 செப்டெம்பர் 15 , மு.ப. 10:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவின் டென்னசி( Tennessee) மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரபல மொடலான மஹோகனி கெட்டர் (Mahogany Geter).

 23 வயதான, இவர் 'லிம்பெடெமா'Lymphedema' என்ற ஒருவகை  நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார்.நிணநீர் நாளங்களுக்கு சேதம் ஏற்படும்போது, நிணநீர்த் திரவத்தின் ஓட்டம் தடைப்பட்டு சில உடல் பாகங்களில் வீக்கத்தை ஏற்படுத்துவதால் இந் நோய் ஏற்படுகின்றது.

இந் நோயின் காரணமாக அவரது இடது காலின்  நிறையானது 45 கிலோ கிராமாக அதிகரித்துக் காணப்படுகின்றது. அத்துடன் தற்போது இவரின் மொத்த உடல் நிறை 136 கிலோ கிராம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் இது குறித்து அவர் ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் ”நான் இத்தோற்றத்தில் இருப்பதால் பலரும் என்னைக் கேலி செய்கின்றனர். எனது காலை வெட்டுமாறு கூறுகின்றனர். ஆனால் எனது  காலை ஒருபோதும் வெட்ட மாட்டேன், இந்த நோய் குறித்து மக்கள் விளிப்புணர்வுடன் இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன், என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X