2021 நவம்பர் 30, செவ்வாய்க்கிழமை

ரஷ்ய விமான விபத்தில் 16 பேர் பலி

Freelancer   / 2021 ஒக்டோபர் 10 , பி.ப. 03:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஷ்யாவின் டாடர்ஸ்தான் பிராந்தியத்தில் எல் - 410 டெர்போலெட் விமானம் விபத்துக்குள்ளானதில், 16 பேர் பலியாகியுள்ளதுடன், 7 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

 இந்த விமானத்தில் பாராசூட் சாகச வீரர்கள் 23 பேர் பயணித்துள்ளனர் என்று ரஷ்ய அவசரநிலை அமைச்சு தெரிவித்துள்ளதுடன், விமான விபத்து இடம்பெற்ற பின்னர், 7 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர் என்றும் அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.

சமீப ஆண்டுகளில் ரஷ்ய விமானப் பாதுகாப்புத் தரங்கள் மேம்பட்டுள்ள போதும் விபத்துகள், குறிப்பாக தொலைதூரப் பகுதிகளில் பழைய விமானங்கள் விபத்துக்குள்ளாவதாக தெரிவிக்கப்படுகிறது.

பழைய அன்டோனோவ் அன் -26 போக்குவரத்து விமானம் கடந்த மாதம் ரஷ்யாவின் தூர கிழக்கில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்தனர். 

இதேபோல், அன்டோனோவ் அன் -26 இரட்டை இயந்திர விமானத்தில் பயணித்த 28 பேரும் ஜூலை மாதம் கம்சட்காவில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தனர்  என்பதும் குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .