2022 ஓகஸ்ட் 11, வியாழக்கிழமை

மகனைப் பால் மற்றும் தேனால் நீராட்டும் தாய்

Ilango Bharathy   / 2022 ஜூலை 05 , மு.ப. 10:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரித்தானியாவைச் சேர்ந்த   தாய் ஒருவர் தனது மகனுக்காக லட்சக்கணக்கில் செலவு செய்துவருவது பலரையும் திகைப்படைய வைத்துள்ளது.

பிரித்தானியாவின் தெற்கு யார்க்ஷயரில் உள்ள ஷெஃபீல்டு பகுதியைச் சேர்ந்தவர் கேசி அக்ரம்.

 32 வயதான கேசிக்கு,  ஜரீம் என்ற 1 வயதான மகன் உள்ளான். நடுத்தர குடும்பத்தை சேர்ந்த கேசி தனது மகனுக்கு லட்சக்கணக்கில் வசித்து வருகிறார்.

குறிப்பாக  வாரத்திற்கு இரண்டு முறை ஜரீமை நீராட்ட  பால் மற்றும் தேனைப்  பயன்படுத்தி வருகின்றார்.
அத்துடன்  ஜரீமிக்கு  மசாஜ் செய்வதற்காக விலையுயர்ந்த எண்ணெய்களை உபயோகிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமில்லாமல் தங்கத்தினால்  செய்யப்பட்ட குழந்தைகளுக்காக சூப்பும் இறப்பர் கருவியையும் பயன் படுத்தி வருகின்றார்.  

இது குறித்து கேசி கருத்துத் தெரிவிக்கையில் "எனது மகனுக்கு நான் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளும் மிகவும் தரமானதாக இருக்கவேண்டும் என விரும்புகிறேன், . எனது மகனுக்காக  நான் எவ்வளவு கஷ்டப்படவும் தயாராக இருக்கிறேன். அவனுக்கு வாங்க வேண்டிய பொருட்களுக்கான பணம் என்னிடம் இல்லை என்றால் அவனுடைய தந்தையிடம் தொலைபேசி மூலம் தெரிவிப்பேன்.
 
 அவர் உடனடியாக பணம் வழங்கி விடுவார். எனது மகன் விருப்பப்படும் அனைத்தும் அவனுக்கு கிடைக்க வேண்டும். அதுவே எனது வாழ்க்கையின் முக்கிய கடமையாக கருதுகிறேன்” என்கிறார்.

மொடலாகவும், நடிகையாகவும் இருந்த கேசி தற்போது தனது பணிகளில் இருந்து விலகி முழுவதுமாக ஜரீனைக் கவனித்து வருகின்றார் எனக் கூறப்படுகின்றது.

மேலும் தொண்டு நிறுவனங்கள் நடத்தும் கடைகளில் தனக்கு உடைகள் வாங்கிக்கொள்ளும் கேசி, ஜரீனுக்கு 50 யூரோ மதிப்பில் ஒரு டி-ஷர்ட்டை வாங்குவதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .