2023 ஜூன் 07, புதன்கிழமை

இஷா அம்பானியின் திருமணம்: இந்தியாவில் நட்சத்திரங்கள்

Editorial   / 2018 டிசெம்பர் 10 , மு.ப. 01:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் மிகப்பெரிய செல்வந்தரான முகேஷ் அம்பானியின் மகளுக்கும், இன்னொரு செல்வந்தரான அஜய் பிரமாலின் மகனுக்கும் இடையிலான திருமணத்தை முன்னிட்டு, இந்தியாவின் மும்பைக்கு, இந்திய, சர்வதேச நட்சத்திரங்கள் படையெடுத்துள்ளனர்.

27 வயதான இஷா அம்பானியும், 33 வயதான ஆனந்த் பிரமாலும், எதிர்வரும் புதன்கிழமை (12) மணமுடிக்க உள்ள போதிலும், திருமணத்துக்கு முன்னரான நிகழ்வுகள், நேற்று முன்தினமே (08) ஆரம்பமாகின.

இவ்வாறு இந்தியாவுக்கு வந்தவர்களில், ஐக்கிய அமெரிக்காவின் முன்னாள் இராஜாங்கச் செயலாளரும் முன்னாள் முதற்பெண்மணியுமான ஹிலாரி கிளின்டனும் உள்ளடங்குகிறார். விசேட விமானம் மூலம் அவர், இந்தியாவை நேற்று முன்தினம் வந்தடைந்தார்.

அவருக்கு மேலதிகமாக, ஃபொங்ஸ் அமைப்பின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜேம்ஸ் முர்டோக், சவூதி அரேபியாவின் சக்தி அமைச்சர் காலிட் அல்-ஃபாலிஹ், ஹஃபிங்டன் போஸ்ட் நிறுவுநர் அரியானா ஹஃபிங்டன், தொழிலதிபர்கள், மஹாராஸ்டிரா மாநில முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இவர்களைத் தவிர, இந்திய சினிமா நட்சத்திரங்கள், தொழிலதிபர்கள், கிரிக்கெட் நட்சத்திரங்கள் உள்ளிட்டோரும் வந்திருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .