2021 ஓகஸ்ட் 01, ஞாயிற்றுக்கிழமை

தன்னை பிரித்தானியராக ராகுல் காந்தி பிரகடனப்படுத்தினார்: சுவாமி

Shanmugan Murugavel   / 2015 நவம்பர் 17 , மு.ப. 12:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரித்தானிய தனியார் நிறுவனமான பக்ஒப்ஸ் மட்டுப்படுத்தப்பட்ட நிறுவனத்தின் இயக்குநராக 2005ஆம் ஆண்டு பதவி வகித்தவேளை, தன்னை பிரித்தானியராக, காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி பிரகடனப்படுத்தியிருந்ததாக பாரதீய ஜனதாக் கட்சியின் தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி குற்றஞ்சாட்டியுள்ளார். எனினும், இந்தக் குற்றச்சாட்டை காங்கிரஸ் கட்சி கடுமையாக மறுத்துள்ளது.

ராகுல் காந்தி இயக்குநராக இருந்த நிறுவனத்தின் வருடாந்த வருமான அறிக்கையின் பிரதிநிதிகளை செய்தியாளர் மாநாடொன்றில் சுப்பிரமணியன் சுவாமி வெளிப்படுத்தியிருந்த நிலையில், அதில், ராகுல் காந்தியின் அடையாளம், பிரித்தானியர் என உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.

மேற்படி விடயம் தொடர்பாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் வரைந்துள்ள சுப்பிரமணியன் சுவாமி, இந்திய அரசியலமைப்பின் படி, இந்தியக் குடியுரிமையக் கொண்டிருக்கும் எவரும், எந்தவொரு நாட்டினதும் வெளிநாட்டு குடியுரிமையைப் பெற முடியாது என்பதை சுட்டிக் காட்டினார். தவிர, சுவிற்ஸர்லாந்தை தளமாகக் கொண்ட வங்கியில், வெளிப்படுத்தப்படாத  வெளிநாட்டு கணக்குகளை வைத்திருப்பதாகவும் சுப்பிரமணியன் சுவாமி குற்றஞ்சாட்டினார்.

இந்நிலையில், மேற்படி ராகுல் காந்தி இயக்குநராக இருந்த இந்தநிறுவனம், 2003ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டபோது, அவர் தன்னை இந்தியராக பிரடகடனப்படுத்தியிருப்பதாக பிரித்தானிய அரசாங்கத்தின் தரவுத் தளத்தில் உள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .