2023 செப்டெம்பர் 28, வியாழக்கிழமை

3திருமணம்; 60 குழந்தைகள்

Ilango Bharathy   / 2023 ஜனவரி 10 , மு.ப. 10:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பாகிஸ்தானின் குவெட்டா நகரில்  வசிக்கும் ‘சர்தார் ஜான் முகமது கான் கில்ஜி‘ என்ற மருத்துவருக்கு ஏற்கனவே மூன்று மனைவிகளும், 60 குழந்தைகளும் உள்ளனர்.

இந்நிலையில் மீண்டும் ஒரு திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகவும்,  இன்னும் சில குழந்தைகளைப் பெற்றெடுக்க விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதே சமயம் அவரது விருப்பத்திற்கு  அவரது மூன்று மனைவிகளும் சம்மதம் தெரிவித்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 குழந்தைகள் அனைவரும் ஒரே வீட்டில் ஒன்றாக வாழ்கிறார்கள். பணவீக்கம் மற்றும் பணப்பற்றாக்குறையால் பாகிஸ்தான் தவித்து வரும் இந்நேரத்தில் அவரது துணிச்சலை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .