2021 ஓகஸ்ட் 03, செவ்வாய்க்கிழமை

‘41 மில்லியன் பேர் பஞ்சத்தின் விளிம்பில்’

Shanmugan Murugavel   / 2021 ஜூன் 23 , மு.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

43 நாடுகளைச் சேர்ந்த 41 மில்லியன் பேர் பஞ்சத்தை எதிர்கொள்ளும் உடனடி  ஆபத்தில் இருப்பதாக உலக உணவுத் திட்டம் எச்சரித்துள்ளது.

நான்கு நாடுகளிலுள்ள ஏறத்தாழ 600,000 பேர் ஏற்கெனவே பஞ்சம் போன்ற நிலைமைகளை எதிர்நோக்குகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

போர்கள், காலநிலை மாற்றம், பொருளாதார அதிர்ச்சிகள் பட்டினியை அதிகரித்துள்ளதுடன், அடிப்படைப் பொருள்களுக்கான விலை அதிகரிப்பானது உணவுப் பாதுகாப்பில் ஏற்கென உள்ள அழுத்தங்களை மேலும் அதிகரித்துள்ளதாக அறிக்கை ஒன்றில் உணவுத் திட்டம் நேற்று தெரிவித்துள்ளது.

எதியோப்பியா, மடகஸ்கார், தென் சூடான், யேமன், நைஜீரியா மற்றும் பேர்க்கினா பாஸோவின் சில பகுதிகளில் பஞ்சம் போன்ற நிலைமைகள் காணப்படுகின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .